நான்கு திசையும் உன் ஒளி
இருட்டை கிழித்து வீசுகின்றன..
எங்கும் உன் வாசம்
சுந்தர இசை பாடிக்கொண்டிருக்கிறது..
யாரிடம் கேட்பேன் ,
இருட்டை கேட்டேன் , மௌனமாய் உறங்கியது
ஓலியை கேட்டேன் , வெட்கப்பட்டு நின்றது
தேவதைகளை கேட்டேன் , பறந்துவிட்டது பாவம்
அமைதியை கேட்டேன் , உன் சொல் எங்கேவென்று
பூவும் பட்டாம்பூச்சியும் என்னை ஏமாற்றிவிட்டது
அகத்திலும் புறத்திலும் உன் உணர்வு
ராகத்தில் நீ தாளத்தில் நீ
மனதின் பித்து நிலை நீ
வாழ்வின் ரகசியம் நீ
எட்டி நடை போட்டேன்
உன் காலடியில் வந்து சரண் அடைந்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
குயில்களின் இசை மழையோடு
நாதத்தின் ஸப்தங்களில்
உன்னை தொழுது விட்டேன் இறைவா!!!
இருட்டை கிழித்து வீசுகின்றன..
எங்கும் உன் வாசம்
சுந்தர இசை பாடிக்கொண்டிருக்கிறது..
யாரிடம் கேட்பேன் ,
இருட்டை கேட்டேன் , மௌனமாய் உறங்கியது
ஓலியை கேட்டேன் , வெட்கப்பட்டு நின்றது
தேவதைகளை கேட்டேன் , பறந்துவிட்டது பாவம்
அமைதியை கேட்டேன் , உன் சொல் எங்கேவென்று
பூவும் பட்டாம்பூச்சியும் என்னை ஏமாற்றிவிட்டது
அகத்திலும் புறத்திலும் உன் உணர்வு
ராகத்தில் நீ தாளத்தில் நீ
மனதின் பித்து நிலை நீ
வாழ்வின் ரகசியம் நீ
எட்டி நடை போட்டேன்
உன் காலடியில் வந்து சரண் அடைந்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
குயில்களின் இசை மழையோடு
நாதத்தின் ஸப்தங்களில்
உன்னை தொழுது விட்டேன் இறைவா!!!