வார்த்தைகள் உதட்டு ஒரமாய் நின்று
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தன
கண் விழியோரமாய் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவ்-உணர்வுகள்
உன்னிடமும் என்னிடமும்
உச்சரிப்பை தொழுது நிற்கின்றன
ஸப்தங்களாய் தோள் மீது தோள் சாய்க்கவேண்டிய அவ்வார்தைகள்
பெயரில்லா உணர்வுகளாய் தேங்கிப்போகின்றன...
இன்ப பூங்காற்றில் மிதக்கவேண்டிய அச்சொற்களை
நீயும் அறியமாட்டாய்
நானும் உணரமாட்டேன்...
உலக சாத்திரத்தை கண்டு அஞ்சி
ஓரு ரகசியமாய் மாறிபோகின்றன
யாருமறியாமல்..